Tuesday, September 18, 2007

என் மூளைக்குள்ளும் சில ப‌ட்டாம்பூச்சிக‌ள்..

1. வானத்து நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கையை கண்டுபிடிக்க ஒரு மிக எளிதான வழி:

எங்க கிராமத்து பாட்டிங்க, அப்பறம் நிறைய பேரு சொல்லி இருக்காங்க இறந்த மனுஷங்க தான் வானத்துல நட்சத்திரமா ஆயிடறாங்கன்னு..
அப்படி இருக்க ..
ஒவ்வொரு நாட்டிலும் ஆதாம் பிறந்த நாளிலிருந்து இன்றைய நாள் வரை இறந்தவர்களின் எண்ணிக்கையை வாங்கி, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை தெரிந்துவிடுமல்லவா...

ஆனால் இந்த கணக்கில் சூரியனை ஒரு நட்சத்திரமாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
அதில் பல சிக்கல்கள் உள்ளது...

இதில் Exact-a சொல்ற க‌ண‌க்கில் சூரிய‌ன் சிக்க‌ல் செஞ்சாலும் ஒரு குத்து ம‌திப்பா அதாவ‌து தோராய‌மா க‌ண‌க்க சொல்லிட‌லாம் பாருங்க‌..

.... Any blood from eyes or ears...
:) hee hee summa ..
ஏன்னே தெரியலை இப்ப எல்லாம் என் மூளை இப்படிதான் ரொம்ப புத்திசாலியா இருக்கு...

குறிப்பு:இந்த புத்திசாலித்தன யுத்தி உதித்தது, நிலாரசிகனின் " நட்சத்திர தேடல்"ங்கிற கதையை படித்துக்கொண்டிருந்தபோது.

Friday, September 7, 2007

ஆசையாக சில ஓசைகளும், பாஷைகளும்..

வான‌ம்
---------

இப்பூ உலகத்தின் தொப்பி - அவள்
என் கனவுலோகத்தின் படப்பிடிப்பு மைதானம் - அவள்

எனை விட்டு விலகியே இருக்கும்
திமிர் பிடித்த பேரழகி - அவள்

காகிதத்தில் நீல நிறம் கொண்டு
அவளை தீட்டும் ஒவ்வொரு நிமிடமும்
துடிக்கிறது என் மனம்…
ஏங்குகின்றன என் கண்கள்…
வாடுகிறது என் உதடுகள்…

வாழ் நாளில் ஒரு முறையாவது
விமான‌த்தில் ப‌ற‌ந்து
அவளுக்கு
பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்து
ரகசியமாய் சொல்லிவிட வேண்டும்
அவள் மேல் நான் கொண்டுள்ள
எல்லையற்ற காதலை..
I Love U my dear SKY!!!!!!


குறிப்பு:
சின்ன வயசில அம்மா அழகா வாசலில் கோலம் போடும்போது எனக்கும் கோலம் போடணும்னு ஆசை வந்ததுண்டு.. ஆயினும் போடத் தெரியாது, அப்படியே போட்டாலும் அது அழகா இருக்காது, எல்லாரும் என்னைப் பார்த்து கேலி பண்ணுவாங்களேன்னு தயங்கி, மனசில ஆசையை சுமந்துகிட்டு அம்மா போடுற கோலத்தை ஏக்கத்தோடு பார்த்து ரசித்து கொண்டிருந்த நேரத்தில், என் ஆசையை புரிந்துகொண்டு, "வாடா..வந்து கோலம் போடுடா பாப்பா.. நீ போடுற கோலத்தை அம்மா பார்த்து ரசிக்கிறேன்னு" என் உயிர், என் அம்மா அன்று சொன்ன மாதிரி இன்று என் தோழன் "ரசிக்க நானிருக்கிறேன், எழுது" என்று என்னை உந்துவித்ததால் வரைந்த கோலமே இந்த வானமெனும் கவிதை.
இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன்னு தானே கேட்கவர்றீங்க..

புரியுது..
இப்படி ஒரு நல்ல தோழனை இந்த கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறாரேன்னு எனக்குள்ள ஒரு பெருமிதம்..
அதான் உங்ககிட்ட எல்லாம் சொல்லி கொஞ்ச‌ம் பெருமை அடித்துக்கொள்ள‌லாமே என்று தான் இந்த குறிப்பு. :)
என்னுடைய‌ இந்த‌ க‌ட‌வுளின் ப‌ரிசை நினைத்து பொறாமைப்ப‌டுவோர் பொறாமைப்ப‌ட‌லாம், ஏக்க‌ப்ப‌டுவோர் ஏக்க‌ப்ப‌ட‌லாம்... ஆனால் த‌ய‌வு செய்து யாரும் கண்ணுவ‌ச்சுடாதீங்க‌..

ஏன்னா..க‌ல்ல‌டி ப‌ட்டாலும் க‌ண்ண‌டி ப‌ட‌க்கூடாதுன்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லிருக்காங்க‌.. அதான்...

உயிரும் உணர்வும் ஒன்றென கலந்த அமர கீதங்கள்

பாடல் – 1
படம்: அவள் அப்படித்தான்
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்:

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடங்கலாம்..
இனியெல்லாம் சுகமே..

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்..

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்..

வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே .. புது அழகிலே நாமும் இணையலாம்..

வாழ்வென்ப‌தோ கீத‌ம் வ‌ள‌ர்கின்ற‌தோ நாத‌ம்

நாளொன்றிலும் ஆனந்தம்..
நீ கண்டதோ துன்பம், இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது..

--------------------------------------------------------------------
பாடல் – 2
படம்:
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்: SPB

ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..

தேசிய‌ விருதுகள் வாங்கலாம், உன் தேக‌த்தை க‌ட்டிவை..
ஆசிய‌ விருதுக‌ள் வாங்க‌லாம், சில ஆணைக‌ள் இட்டுவை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..


மூச்சு நின்றாலும் முய‌ற்சி நில்லாது..
காற்று ஓய்ந்தாலும் கால்க‌ள் ஓயாது..
ஓடிப்பாராம‌ல் தூர‌ம் க‌ழியாது..
வேர்வை இல்லாம‌ல் வெற்றி கிடையாது..
தேக‌ம் வ‌ளையாம‌ல் யாக‌ம் முடியாது..
காணும் ஒவ்வொரு விதையிலும் ஓர் ம‌ர‌ம் உள்ளே உறங்குது இல்லையா..
மூடிய‌ பூமியை முட்டியே புல்க‌ளும் முளைக்குது இல்லையா..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..


க‌ட்டி வைத்தாலும் க‌ங்கை நில்லாது..
வெட்டி வைத்தாலும் வாழை சாகாது..
தோல்வி இல்லாம‌ல் வெற்றி விள‌ங்காது..
தொட‌ர்ந்து முன்னேறு தோல்வி கிடையாது..
பாதை தீர்ந்தாலும் ப‌ய‌ண‌ம் தீராது..
அன்று போருக்குள் புதைந்திட்ட‌ ஜ‌ப்பானில் பூக்க‌ள் பூத்த‌து எப்ப‌டி?
கால்க‌ளில் ர‌ண‌ம் கொண்ட பெண்மானே உலகை தாண்ட‌னும் அப்ப‌டி..

ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
தேசிய‌ விருதுகள் வாங்கலாம், உன் தேக‌த்தை க‌ட்டிவை..
ஆசிய‌ விருதுக‌ள் வாங்க‌லாம், சில ஆணைக‌ள் இட்டுவை..

-------------------------------------------------------------------------------------

பாடல் - 3

படம்:
இசை:
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்:

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

-------------------------------------------------------------------
பாடல் - 4

படம்:
இசை:
பாடலாசிரியர்:
கண்ணதாசன் பாடகர்கள்:

ஆசையே அலைபோலே
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)