Tuesday, September 18, 2007

என் மூளைக்குள்ளும் சில ப‌ட்டாம்பூச்சிக‌ள்..

1. வானத்து நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கையை கண்டுபிடிக்க ஒரு மிக எளிதான வழி:

எங்க கிராமத்து பாட்டிங்க, அப்பறம் நிறைய பேரு சொல்லி இருக்காங்க இறந்த மனுஷங்க தான் வானத்துல நட்சத்திரமா ஆயிடறாங்கன்னு..
அப்படி இருக்க ..
ஒவ்வொரு நாட்டிலும் ஆதாம் பிறந்த நாளிலிருந்து இன்றைய நாள் வரை இறந்தவர்களின் எண்ணிக்கையை வாங்கி, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை தெரிந்துவிடுமல்லவா...

ஆனால் இந்த கணக்கில் சூரியனை ஒரு நட்சத்திரமாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
அதில் பல சிக்கல்கள் உள்ளது...

இதில் Exact-a சொல்ற க‌ண‌க்கில் சூரிய‌ன் சிக்க‌ல் செஞ்சாலும் ஒரு குத்து ம‌திப்பா அதாவ‌து தோராய‌மா க‌ண‌க்க சொல்லிட‌லாம் பாருங்க‌..

.... Any blood from eyes or ears...
:) hee hee summa ..
ஏன்னே தெரியலை இப்ப எல்லாம் என் மூளை இப்படிதான் ரொம்ப புத்திசாலியா இருக்கு...

குறிப்பு:இந்த புத்திசாலித்தன யுத்தி உதித்தது, நிலாரசிகனின் " நட்சத்திர தேடல்"ங்கிற கதையை படித்துக்கொண்டிருந்தபோது.

9 comments:

காளீஸ்வரன் முத்துசாமி said...
This comment has been removed by the author.
காளீஸ்வரன் முத்துசாமி said...

விரைவில் ஒரு வால் நட்சத்திரம் அதில் இனையும், பாத்துங்க அமெரிக்கா ஆளுங்க அவிங்ய ஊரு ஆள்ன்னு நினச்சு அவிங்ய ஊரு பேர வெச்சுர போராங்ய...

யோசிப்பவர் said...

ரெம்ப அறிவாளியா இருக்கீங்க!;-)

சோ.மஹாலெட்சுமி said...

காளீஸ்வரன்,

நீங்களெல்லாம் இருக்கும்போது அப்படி நடக்க விட்டுருவீகளா.. என்ன.?..

யோசிப்பவரே,

என்னை அறிவாளின்னு கூறிய பொய்மானே (இந்த பாராட்டு விஷ‌ய‌த்தில் ம‌ட்டும்) நீங்க‌ள் வாழ்க‌! உங்க‌ள் Blog வாழ்க!

அப்ப‌ற‌ம் ஒரு விஷ‌ய‌த்தை publish ப‌ண்ணும்போது சொல்ல‌ மறந்துட்டேனுங்க‌..

இந்த புத்திசாலித்தன யுத்தி உதித்தது, நிலாரசிகனின் " நட்சத்திர தேடல்"ங்கிற கவிதையை படித்துக்கொண்டிருந்தபோது..

யோசிப்பவர் said...

//இந்த புத்திசாலித்தன யுத்தி உதித்தது, நிலாரசிகனின் " நட்சத்திர தேடல்"ங்கிற கவிதையை படித்துக்கொண்டிருந்தபோது..
//
ஓ! இதை படிக்கும்போதே அது எனக்கு புரிந்துவிட்டது!!!;-)

யோசிப்பவர் said...

//நட்சத்திர தேடல்"ங்கிற கவிதையை //
அது கதைன்னு நினைக்கிறேன்!!

சோ.மஹாலெட்சுமி said...

மன்னிச்சிடுங்க யோசிப்பவரே, 'நிலாரசிகன்' என்றாலே 'கவிதை' தான் அப்படின்னு என் மூளையில் ரொம்ப ஆழமா பதிஞ்சுருச்சு போல.. அதான் இப்படி கதைன்னு எழுத வந்தவ என்னையும் அறியாம கவிதைன்னு எழுதி வச்சுருக்கேன்..

இப்ப correct பண்ணிட்டேன்.. ரொம்ப Thanks.

ராஜா முஹம்மது said...

உங்கல நினச்சலே புல்லறிகுது. என்னமா சிந்திகுரீங்க....

சோ.மஹாலெட்சுமி said...

// புல்லறிகுது //
புல்லுக்கு அறிச்ச‌து உங்க‌ளுக்கு எப்ப‌டிங்க‌ தெரிந்த‌து? ;-)