Wednesday, November 7, 2007

ஆசிரிய‌ர் குறிப்பு:

தோராயமாக ஒரு ஒன்ற‌ரை வருட‌த்திற்கு முன், எங்க‌ ஊரு ப‌க்க‌ம் ஒரு குடும்ப‌ம் எய்ட்ஸ் வந்ததால தற்கொலை பண்ணிகிட்டதா கேள்விப‌ட்டேன்.. அதன்பிறகு பெங்களுரில் உள்ள Freedom Foundation என்ற‌ எய்ட்ஸ் மையத்துக்கு நண்பர்களுடன் போயிருந்தேன்..
அங்கே இருந்த‌வர்களில் பெரும்பாலானோர் கிராம‌த்துக்காரர்கள்‌.. அதில் நிறைய‌ பேரு த‌மிழ்நாடைச் சேர்ந்த‌வர்கள்.. கிட்டத்தட்ட 20 குழ‌ந்தைகள்‌ இருந்தார்கள்‌.. ஒவ்வொரு குழந்தையும் அவ்வ‌ள‌வு அழ‌கா இருந்தார்கள்.. ரொம்ப‌ புத்திசாலியாகவும், சுறுசுறுப்பாகவும், க‌டவுள் ப‌க்தி மிக்கவர்களாகவும், மிகுந்த பாசமுடனும் இருந்தார்கள்.. அன்றைய‌ தின‌ம் இன்னும் என் கண்களை விட்டு ம‌றையவில்லை..
ப‌ல‌ ச‌ம‌யங்களில் என்னை உறைய‌ வைப்ப‌து அந்த‌க் குழ‌ந்தைகளின் முகங்களே..

அதில் ஜான்சி, ச‌ர‌ஸ்வ‌தின்னு இர‌ண்டு குழ‌ந்தைங்க என் கைய‌ பிடிச்சிகிட்டு விட‌வே இல்லை.. ம‌ற‌க்காம கிறிஸ்ம‌ஸ்க்கு வ‌ந்துருங்க‌ அக்கான்னு எதிர்பார்ப்போட‌ சொன்னாங்க‌‌.. என்னால போக‌முடியாமல் ஆகிவிட்டது..மனதில் குடிகொண்ட‌ பாரத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும், என்னால் முடிந்த வரை உதவ வேண்டும் என்றும் நினைத்தேன்..

சிறியதா, குட்டியா எய்ட்ஸ் விழிப்புண‌ர்வை உண‌ர்ர்த்துற மாதிரி ஒரு சிறுகதை எழுத‌ணும்னு நினைத்தேன்.. அதன்பொருட்டே என்னால் முடிந்தவரை சின்ன‌தா ரொம்ப, ரொம்ப குட்டிக் க‌தையாக‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வழ, வழ என்றெல்லாம் இழுக்காமல் எழுதியுள்ளேன்..

முதல் அத்தியாயம் எழுதியவுடன், இந்தக் கதையை விழிப்புணர்வுக் கதையாகக் கொடுக்க எனக்கு மனசில்லை..
கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மாதமாக‌ கதையைத் தொடரவிடாமல் எனக்குள் பல கேள்விகள்.. அனைத்தையும் மீறிக் கதையை தொடங்கிய எண்ணத்தோடு ஒத்துப்போகும் அளவிற்கு எழுதி முடித்துவிட்டேன்..

கதை தங்களுக்கு பிடித்திருந்தாலும் பரவாயில்லை, பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.. கஷ்டப்பட்டு எழுதிய என் பொறுப்புணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. தயைக் கூர்ந்து அந்த ஆள்க்கொல்லியின் அராஜகத்திற்கு முடிவுகட்டும் வகையில் ஆவண செய்ய தங்களால் முடியும் என்றவரை முயலுங்கள்..

இதுவே நான் எழுதிய முதல் கதை.. ஆதலால் எழுத்துப்பிழை, பொருட்ப்பிழை, நடைப்பிழை, சந்தப்பிழைகள் என்று தங்கள் கண்டுகொள்ளும் எந்தப் பிழையாயினும் மன்னிக்காமல், அலட்சியப்படுத்தாமல் எனக்குச் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

க‌டைசி வ‌ரை ப‌டித்த‌த‌ற்கும், த‌ங்க‌ளின் ஆத‌ர‌விற்கும் ந‌ன்றி..

அன்புட‌ன்,
சோ.ம‌ஹாலெட்சுமி

5 comments:

Malar said...

Very, Very Nice..

Prathap Venugopal said...

Good One.. I didnt expect such a long story (Though you have mentioned it as a short story) and with an unimaginaeable theme..

Vattaara mozhi vazhakkil ungal sollaazhumai viyakka vaikkirathu.. Just imagined whether i could write such one..(absolutely no chance!!) But i dont know which part of TN's slang is this.. I couldnt identify this as a Madurai or Thirunelveli or in a different place....

Seems that I am in touch with a future-writer.. Keep it up..

சோ.மஹாலெட்சுமி said...

கீதா மற்றும் வணக்கம்பட்டி ராமசாமி,
கதையை முழுவதும் படித்து பின்னூட்டமிட்டதற்கு என் மனமார்ந்த‌ நன்றிகள்.

இது புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைக்கூடலில் வசிக்கும் கிராமங்களின் பேச்சு முறையென நான் கூறினாலும், இதில் புதுக்கோட்டை மாவட்ட கிராமச்சந்தம் சற்று மிகையாகக் காணப்படும்.
// I didnt expect such a long story (Though you have mentioned it as a short story)//

நீங்க சொல்றது உண்மைதானுங்க.
ஆனா பாருங்க, எனக்கு எழுதத் தோன்றியதில் முக்கால் பங்கை மிகவும் கடினப்பட்டு எனக்குள்ளே நான் முழுங்கி, வெறும் கால் பங்கையை எழுதியுள்ளேன். அதனாலேயே சின்னக் கதையென்று கூறியுள்ளேன்.

நன்றி,
சோ.மஹாலெட்சுமி.

sarav said...

இது தங்களின் முதற்கதை என்பதை என்னால் நம்ப இயலவில்லை...! நான் ஒரு புத்தக பிரியன், கல்கி, சாண்டில்யன், சுஜாதா, ராஜேஸ்குமார், சுபா, இந்திரா சௌந்தரராஜன் போன்றவர்களின் எழுத்துக்களை மட்டுமே ரசித்து வந்தேன். இன்று தான் முதல் முறையாக நிலா ரசிகனின் தளத்தில் அவரின் கதைகளையும், கவிதைகளையும், அதற்கு உங்கள் விமர்சனங்களையும், உங்களுக்கும் யோசிபோருக்கும் ஏற்பட்ட சொற்போரையும் பார்தேன். உங்கள் ஆழ்ந்த விமர்சனத்தாலும், விளக்கத்தாலும் வியப்படைந்து, கவரப்பட்டு உங்கள் blog பார்த்தேன்.
எடுத்த உடனேயே கதையை வாசிக்க தொடங்கி விட்டேன். முதல் மூன்று அத்தியாய முடிவிலேயே நான் நினைத்தது என்னவென்றால், மிக அனுபவம் மிக்க ஓர் கதாசிரியர் என்று தங்களை நினைத்தேன், அது மட்டுமன்றி இவ்வளவு தரம் மிக்க எழுத்துக்களை இவ்ளவு நாட்கள் miss செய்து விட்டு வியபரரீதியான(commercial books) எழுத்தக்களை ரசித்து ஆதரிதமைக்கு மிகவும் வருதபடுகிறேன். அதே சமயத்தில் இபோலுதாவது கண்டு கண்டுகொண்டோமே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களது கன்னி முயற்சிக்கு(debut) எனது வாழ்த்துக்கள். தங்களது தரம்மிக்க எழுது பணி மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
பி.கு :
தங்களை போன்று சுவையாக, தரமாக எழுத எனக்கு வரவில்லை. எனவே சற்று பல்லை கடித்துக்கொண்டு இந்த பின்னூட்டத்தை படித்து முடித்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரவணன்

சோ.மஹாலெட்சுமி said...

மதிப்பிற்குரிய சரவணன் (எ) தனி காட்டு ராஜா அவர்களுக்கு,

தங்களின் ஆதரவிற்கும் உற்சாகமூட்டலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நானும் ஒரு புத்தகப் பிரியையே.. கல்கியின் நடை சாயலில் பலமுறை எனை மறந்து,கூடுவிட்டு கூடுபாய்ந்து அவரின் கதையோடு வாழ்ந்ததும் கூட உண்டு. They are all legends.


பி.கு:
த‌ங்க‌ளின் உள்ள‌ப் பூர்வ‌மான‌ விம‌ர்ச‌ன‌த்தை, கூத்தில் வ‌ரும் கோமாளியைப் (ப‌பூன்) போல் வாயைப்பிளந்து கொண்டு, க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஜொள்ளு (சிந்தி)விடாம‌ல் ப‌டித்து முடித்துவிட்டேன். ஆன‌ந்த‌ உற்சாக‌மும் அடைந்தேன்.

நன்றி,
சோ.மஹாலெட்சுமி