Friday, September 7, 2007

ஆசையாக சில ஓசைகளும், பாஷைகளும்..

வான‌ம்
---------

இப்பூ உலகத்தின் தொப்பி - அவள்
என் கனவுலோகத்தின் படப்பிடிப்பு மைதானம் - அவள்

எனை விட்டு விலகியே இருக்கும்
திமிர் பிடித்த பேரழகி - அவள்

காகிதத்தில் நீல நிறம் கொண்டு
அவளை தீட்டும் ஒவ்வொரு நிமிடமும்
துடிக்கிறது என் மனம்…
ஏங்குகின்றன என் கண்கள்…
வாடுகிறது என் உதடுகள்…

வாழ் நாளில் ஒரு முறையாவது
விமான‌த்தில் ப‌ற‌ந்து
அவளுக்கு
பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்து
ரகசியமாய் சொல்லிவிட வேண்டும்
அவள் மேல் நான் கொண்டுள்ள
எல்லையற்ற காதலை..
I Love U my dear SKY!!!!!!


குறிப்பு:
சின்ன வயசில அம்மா அழகா வாசலில் கோலம் போடும்போது எனக்கும் கோலம் போடணும்னு ஆசை வந்ததுண்டு.. ஆயினும் போடத் தெரியாது, அப்படியே போட்டாலும் அது அழகா இருக்காது, எல்லாரும் என்னைப் பார்த்து கேலி பண்ணுவாங்களேன்னு தயங்கி, மனசில ஆசையை சுமந்துகிட்டு அம்மா போடுற கோலத்தை ஏக்கத்தோடு பார்த்து ரசித்து கொண்டிருந்த நேரத்தில், என் ஆசையை புரிந்துகொண்டு, "வாடா..வந்து கோலம் போடுடா பாப்பா.. நீ போடுற கோலத்தை அம்மா பார்த்து ரசிக்கிறேன்னு" என் உயிர், என் அம்மா அன்று சொன்ன மாதிரி இன்று என் தோழன் "ரசிக்க நானிருக்கிறேன், எழுது" என்று என்னை உந்துவித்ததால் வரைந்த கோலமே இந்த வானமெனும் கவிதை.
இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன்னு தானே கேட்கவர்றீங்க..

புரியுது..
இப்படி ஒரு நல்ல தோழனை இந்த கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறாரேன்னு எனக்குள்ள ஒரு பெருமிதம்..
அதான் உங்ககிட்ட எல்லாம் சொல்லி கொஞ்ச‌ம் பெருமை அடித்துக்கொள்ள‌லாமே என்று தான் இந்த குறிப்பு. :)
என்னுடைய‌ இந்த‌ க‌ட‌வுளின் ப‌ரிசை நினைத்து பொறாமைப்ப‌டுவோர் பொறாமைப்ப‌ட‌லாம், ஏக்க‌ப்ப‌டுவோர் ஏக்க‌ப்ப‌ட‌லாம்... ஆனால் த‌ய‌வு செய்து யாரும் கண்ணுவ‌ச்சுடாதீங்க‌..

ஏன்னா..க‌ல்ல‌டி ப‌ட்டாலும் க‌ண்ண‌டி ப‌ட‌க்கூடாதுன்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லிருக்காங்க‌.. அதான்...

4 comments:

நிலாரசிகன் said...

//எனை விட்டு விலகியே இருக்கும்
திமிர் பிடித்த பேரழகி - அவள்//

ரசித்த வரிகள்.

சோ.மஹாலெட்சுமி said...

நிலாரசிகன்,
தங்கள் ரசனைக்கு நன்றி!

காஞ்சனை said...

அடடா! நான் சொல்ல வந்ததை நிலாரசிகனே சொல்லிட்டாருங்க மஹா.
//விமான‌த்தில் ப‌ற‌ந்து//
எனக்கும் இந்த ஆசை இருக்குங்க.

- சகாரா.

ராஜா முஹம்மது said...

எப்படி உங்களலா மட்டும் இப்படி ...